Social Icons

Pages

Sunday, October 25, 2009

kollu adai

கொள்ளு உடம்பிற்கு சூடு ஆகையால் வெந்தயம் சேர்த்து அரைத்து இருக்கேன்கொள்ளு = அரை கப்கடலை பருப்பு = கால் கப்புழுங்கல் அரிசி = கால் கப்வெந்தயம் = முக்கால் தேக்கரண்டிசில்லி பிளேக்ஸ் = ஒரு தேக்கரண்டிவெங்காயம் = அரை தேக்கரண்டிதக்காளி = பெரிய தக்காளி ஒன்று பூண்டு = முன்று பல்உப்பு = தேவைக்குபெருங்காயப்பொடி = கால் தேக்கரண்டி.

Monday, August 17, 2009

நோன்பு கஞ்சி






இஸ்லாமிய‌ இல்ல‌ங்க‌ளில் நோன்பு கால‌ங்க‌ளில் செய்யும் க‌ஞ்சியின் சுவைக்கு ஈடு இனை எதுவுமே கிடையாது. நோன்பு திற‌ந்த‌வுட‌ன் ஒரு ப‌வுள் முழுவ‌தும் குடித்தால் ந‌ல்ல‌ என‌ர்ஜி கிடைக்கும்.இதை ப‌ல‌ வ‌கையாக‌ செய்யலாம் அதில் இது குக்க‌ர் முறை, இதில் தாளிப்பு, எண்ணை எல்லாம் குறைத்து செய்தால் நோன்பு நேர‌த்திற்கு ந‌ல்ல‌து.















தேவையான பொருட்கள்.

சிக்கன் (அ மட்டன் கீமா – 100 கிராம்
பாசுமதி அரிசி மிக்சியில் பொடித்த நொய் – முக்கால் டம்ளர்
பச்ச பருப்பு – இரண்டு மேசை கரண்டி (பொங்கலுக்கு போடுவது)
வெங்காயம் – ஒன்று பெரியது
தக்காளி – ஒன்று
தயிர் – ஒரு மேசை கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு மேசை கரண்டி
கேரட் – அரை துண்டு
பச்ச மிளகாய் – ஒன்று
மிள்காய் தூள் – அரை தேக்காண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
எண்ணை – ஒரு தேக்கரண்டி
நெய் (அ) டால்டா – ஒரு தேக்கரண்டி
தேஙகாய் - இரண்டு பத்தை (அ) தேங்காய் பவுடர் இரண்டு தேக்கரண்டி
பட்டை கிராம்பு, ஏலம் - தலா ஒன்று ஒன்று
வெந்தயம் = கால் தேக்கரண்டி
கொத்து மல்லி தழை – சிறிது
புதினா – சிறிது







செய்முறை

1. வெங்காயம், தக்காளியை பொடியாக அரிந்து கொள்ளவேன்டும்.புதினா, கொத்துமல்லி , பச்ச மிளகாயை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி வைக்கவேண்டும். கீமாவை சுத்தம் செய்து தண்ணீரை வடித்து வைக்க வேண்டும்.கேரட்டை பூ போல் துருவி வைக்க வேண்டும்.அரிசி பருப்பை களைந்து ஊறவைக்க வேண்டும்.

குக்கரில் நெய்+டால்டாவை ஊற்றி காய்ந்ததும் பட்டை ,கிராம்பு,ஏலத்தை போட்டு பொடிய விட வேண்டும்.

அரிந்து வைத்துள்ள வெங்காயத்தை பொட்டு நன்கு வதக்க வேண்டும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.(பச்ச வாடை போகும் வரை)

இப்போது தக்காளி பச்சமிளகாய் போட்டு நன்கு வதக்கவேண்டும்.
தக்காளி சுருண்டதும் கீமா, கேரட், உப்பு,மிள்காய் தூள், கொத்து மல்லி, புதினா,மஞ்சள் தூள் அனைத்தையும் போட்டு நன்கு வதக்கவேண்டும்.








தயிர் சேர்த்து கிளறி தண்ணீர் அளந்து ஊற்ற் வேண்டும்.ஒன்றுக்கு நாலு டம்ளர் தண்ணீர் ஊற்றவேணும்.

தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் நொயையும் பருபையும் தண்ணீரை வடித்து போடவேண்டும்.
நல்ல கிளறி கிளறி விட்டு கொதிக்க விட வேண்டும்.

குக்கரை மூடி வெயிட் போட்டு தீயை குறைத்து வைத்து முன்று விசில் வந்ததும் ஆஃப் பண்ணி விடவேண்டும்.


ஆவி அடங்கிய‌தும் தேங்காய் பால் ஊற்றி நன்கு கொத்திக்க விட்டு கொத்து மல்லி தழை தூவை இரக்கி சாப்பிடவும்.

சுவையான நோன்பு கஞ்சி தயார்.

இதற்கு தொட்டு கொள்ள பகோடா, பஜ்ஜி,உளுந்து வடை, மற்றும் புதினா துவையல் நல்ல காம்பினேஷன்.

குறிப்பு.

குக்கரில் செய்வதால் கஞ்சியை சூட்டோரு வைக்க அப்படியே குக்கரில் வைக்க கூடாது செய்து முடித்ததும் கிளறி விட்டு வேறு ஒரு பாத்திரத்துக்கு மாற்றி விட வேண்டும்.கஞ்சியை வெளியிலேயே வேக விட்டும் செய்யலாம். கையில் பச்ச குழந்தைவைத்திருப்பவரகள், வேலைக்கு போகிறவர்களுக்கு இந்த முறை ஈசியாக இருக்கும்.வெயிட் போட்டதும் தீயை குறைத்து வைக்கனும். இல்லை என்றால் தெரிக்கும்.கீமா அதிகமா தேவை படுகிறவர்கள் கூட கொஞ்சம் சேர்த்து கொள்ளுங்கள்.
இதை ம‌ட்ட‌ன் கீமா,வெஜ் டேபுள்ஸ் ம‌ட்டும் போட்டு கூட‌ செய்ய‌லாம்.




நொய் என்பது பாதியாக பொடித்த அரிசி.

இது நோன்பு காலத்திற்கு என்று ஒரு கிலோ முக்கால் பதத்திற்கு பொடித்து அதில் பாசி பருப்பு கால் கிலோ, வெந்தயம் சேர்த்து கலந்து வைத்து கொள்ளுங்கள், பர்கல் இருந்தால் அதுவும் கால் கப் கலந்து வைத்து கொள்ளலாம். தேவைக்கு தினம் ஒரு டம்ளர் அளவிற்கு செட்து குடிக்கலாம், ஒரு டம்ளர் போட்டு செய்தால் நான்கு பேர் தாரளமாக குடிக்கலாம்.

தக்காளி சட்னி

தக்காளி இஞ்சி சட்னி


அரைக்க‌


நன்கு பழுத்த தக்காளி = நான்கு
இஞ்சி = ஒரு அங்குல துண்டு
கான்ச் மிளகாய் = ஒன்று
தேங்காய் துருவல் = ஒரு மேசை கரண்டி
உப்பு = சிறிது

தாளிக்க‌

எண்ணை = அரை தேக்கரண்டி
கடுகு = கால் தேக்கரண்டி
பெருங்காயம் = ஒரு பின்ச்



த‌க்காளியை பொடியாக‌ அரிந்து, இஞ்சியை தோல் நீக்கி பொடியாக‌ அரிந்து அத்துட‌ன் த‌க்காளி,உப்பு, காஞ்ச‌ மிள‌காய் சேர்த்து ந‌ன்கு அரைக்க‌வும்.

தாளிக்க‌ கொடுத்துள்ள‌வைக‌ளை தாளித்து சேர்த்து கொதிக்க விட்டு இரக்கவும்.

சுவையான‌ த‌க்காளி இஞ்சி ச‌ட்னி ரெடி

இது க‌ர்பிணி பெண்க‌ள் வாய்க்கு ருசி ப‌டும்.தோசைக்கு தொட்டு கொள்ள‌ சூப்ப‌ராக‌ இருக்கும், செய்வ‌தும் சுல‌ப‌ம்.

எல்லாவகையான தோசை அடைக்கும் தொட்டு சாப்பிட நல்ல இருக்கும்.

படம் பிறகு சேர்க்கப்படும்

Sunday, August 16, 2009

மட்டன் (அ) பீஃப் பார்பிகியு (கீரின் மசாலா)






தேவையான பொருட்கள்


மட்டன் எலும்பில்லாதது = ஒரு கிலோ
தயிர் ‍= நான்கு மேசை க‌ர‌ண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் = ‍ இரண்டு மேசை கரண்டி
தக்காளி ‍= ஒன்று பெரிய‌து

பச்ச மிள்காய் = ‍ ஐந்து
மிளகு தூள் = முன்று தேக்கரண்டி
மஞ்சள் தூள் = அரை தேக்கரண்டி
உப்பு தூள் = இரண்டு மேசை கரண்டி (அ)(ருசிக்கு)
கொத்து மல்லி தழை ‍= அரை கட்டு (பொடியாக அரிந்தது)
புதினா ‍ = ஒரு மேசைகரண்டி (பொடியாக அரிந்தது)
கருவேப்பிலை = ஒரு மேசைகரண்டி (பொடியாக அரிந்தது)
ஆலிவ் ஆயில் ‍= நான்கு மேசை கரண்டி
ஆவிவ் ஆயில் = சுட தேவையான அளவு
லெமன் ‍= முன்று








செய்முறை



1. தேவையான பொருட்களை ரெடியாக வைக்கவும்.மட்டனை நன்கு கழுவி தண்ணீரை வடிக்கவும், கொத்துமல்லி,புதினா,பச்சமிளகாய், கருவேப்பிலையை நன்கு மண்ணில்லாமல் கழுவி தண்ணீரை வடிக்கவும்.

2.மிக்சியில் கொத்து மல்லி,புதினா,பச்சமிளகாய்,கருவேப்பிலையை அரைத்து அத்துடன் மிளகுதூள் உப்பு தூள்,மஞ்சள் தூளை சேர்க்கவும்.

தக்காளியையும் அரைத்து சேர்க்கவும்.








3.அரைத்த மசாலாக்களுடன் ,தயிர்,மட்டன் ,இஞ்சி பூண்டு ஆகியவற்றை கலக்கவும்.

4.நன்கு கலக்கி ஆலிவ் ஆயிலும் சேர்த்து முன்று மணி நேரம் ஊறவைக்கவும்.







5.ஊறிய கறியை BBQ செய்ய கம்பியில் கோர்க்கவும்.

6.BBQ அடுப்பில் தீ மூட்டி நன்கு நெருப்பானதும் சுடவும்.

7.சிறிது சிறிதாக ஆலிவ் ஆயில் கறியில் விடவும்.

8.திருப்பி போட்டு மறுபடி சிறிது எண்ணை விட்டு நன்கு வேகவிடவும்.






9.நன்கு பொரிந்ததும் எடுக்கவும்.

10.சுவையான மட்டன் BBQ ரெடி.


குறிப்பு
இதற்கு கீரின் மாசாலா, மற்றும் ரெட் மசாலா அவரவர் விருப்பபடி எதுவேண்டுமானாலும் போடலாம்.
இதற்கு தொட்டு கொள்ள குபூஸ்,கார்லிக் சாஸ், சாலட் போன்றவையுடன் சேர்த்து சாப்பிட‌லாம்.

Wednesday, August 5, 2009

லெமன் லாலி பாப் சிக்கன்





தேவையான பொருட்கள்
சிக்கன் லாலி பாப் - 12 பீஸ் (லெக் பீஸ்)
லெமென் - இரண்டு
மிளகாய் தூள் = ஒரு மேசை கரண்டி
உப்பு தூள் - ஒன்னறை தேக்கரண்டி (தேவைக்கு)
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரன்டு தேக்கரண்டி
கார்ன் பிளார்(சோள) மாவு - இரண்டு மேசை கரண்டி
அரிசி மாவு - ஒரு தேக்கரண்டி
எண்ணை - ஒரு தேக்கரண்டி
எண்ணை - பொரிக்க தேவையான அளவு
சோயா சாஸ் - ஒரு தேகக்ரண்டி


செய்முறை


1.சிக்கன் லெக் பீஸை சுத்தமாக கழுவி ஆழமாக இரண்டு கீரல்கள் போட்டு ஒரு எலுமிச்சையில் உள்ள சாறை ஊற்றி பத்து நிமிடம் ஊறவைத்து நன்கு கழுவி தண்ணீரை வடிக்கவும்.

2.முதலில் லெமென்,உப்பு,கார்ன் மாவு சேர்த்து நன்கு பிசறவும்.

3.பிறகுமிளகு தூள்,இஞ்சி பூண்டு பேஸ்ட்,மிளகாய் தூள், எண்ணை சேர்த்து பிசறவும்.

4.சிக்கனை எல்லாமசாலாக்களும் ஒரு சேர பிறட்டியதும் முன்று மணி நேரம் ஊறவைக்கவும்.

5.நன்கு ஊறிய சிக்கனை எண்ணையை காயவைத்து டீப் பிரை செய்யவும்.

6.நல்ல எலுமிச்சையின் மணத்தில் குழந்தைகளுக்கு பிடித்த லாலி பாப் ரெடி.வும்


குறிப்பு:


1.சிக்கனில் ஒவ்வன்றாக போட்டு விரவுவதால் நன்கு மசாலா பிடிக்கும்.
2.பொரிக்கும் போது எண்ணை சூடானது தீயை மிதமாக வைத்து பொரிகக்வும். அப்போது தான் சிக்கன் நன்கு வேகும்.
3.ஒரு மணி நேரம் ஊறினால் போதும் முன்று மணி நேரம் ஊறினால் இன்னும் நல்ல இருக்கும்.
4.சிக்கனை பல முறையில் பொரிக்கலாம் அதில் இது ஒரு வகை.
5. காஷ்மீரி சில்லி நல்ல கலர் புல்லாக இருக்கும்,காரம் அதிகம் இருக்காது, இது கிடைக்காதவர்கள், சாதா மிளகாய் தூள் சேர்த்து , ரெட் கலர் பொடி சிறிது சேர்த்து கொள்ளலாம்.

Saturday, July 11, 2009

முட்டை மூளை வதக்கல்



தேவையான‌ பொருட்க‌ள்



ஆட்டு மூளை = இரண்டு
முட்டை = இரண்டு
வெங்காயம் = நான்கு
தக்காளி ‍= ஒன்று பொரியது
இஞ்சி பூண்டு பேஸ்ட் = ஒரு மேசை கரண்டி
ரெட் க‌லர் ப‌ச்ச‌மிள‌காய் = முன்று
மிள‌காய் தூள் = ஒரு தேக்க‌ர‌ண்டி
ம‌ஞ்ச‌ள் தூள் = அரை தேக்க‌ர‌ண்டி
உப்பு = ஒரு தேக்க‌ர‌ண்டி (ருசிக்கு)
ப‌ட்டை = ஒரு சிறிய‌ துண்டு
க‌ர‌ம் ம‌சாலா தூள் = கால் தேக்க‌ர‌ண்டி
எண்ணை ‍= ஆறு தேக்க‌ர‌ண்டி
கொத்து ம‌ல்லி த‌ழை = கால் கை பிடி

செய்முறை

1.சூடான‌ வெண்ணீரில் சிறிது வினிகர் ஊற்றி மூளையை போட்டு மேலே உள்ள‌ மெல்லிய‌ தோலை மூளை உடையாம‌ல் பிரித்து எடுத்து ந‌ன்கு க‌ழுவி எடுத்து த‌ண்ணீரை வ‌டிக்க‌வும்.

2.முட்டையை ந‌ன்கு நுரை பொங்க‌ அடித்து வைக்க‌வும்.

3. மூளையில் கால் தேக்க‌ர‌ண்டி,உப்பு கால் தேக்க‌ர‌ண்டி, சிறிது மிள‌காய் தூள்,இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ப‌த்து நிமிட‌ம் ஊற‌வைக்க‌வும்.

4.ஒரு வாய‌க‌ன்ற‌ வான‌லியில் எண்ணை முன்று தேக்க‌ர‌ண்டி அள‌விற்கு ஊற்றி காய‌வைத்து ப‌ட்டையை போட்டு வெடிக்க‌விட்டு வெங்காய‌த்தை பொடியாக‌ அரிந்து சேர்க்க‌வும்.

5.வெங்காய‌ம் வெந்த‌தும் மீதி உள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ந‌ன்கு வாடை போக‌ வ‌த‌க்கி சிறிது கொத்தும‌ல்லி த‌ழை சேர்த்து த‌க்காளியை பொடியாக‌ அரிந்து சேர்த்து , மிளகாய் தூள்,மஞ்சள் தூள், உப்பு தூளும் சேர்த்து கிள‌றி சிறிது நேர‌ம் மூடி போட்டு வேக‌ விட‌வும்.

6. இப்போது மூளையை போட்டு லேசாக‌ பிர‌ட்டி முடி போட்டு ஒரு ப‌க்க‌ம் வேக‌ விட‌வும்,இதே போல் ம‌றுப‌க்க‌ம் தோசை பிர‌ட்டுவ‌து போல் பிர‌ட்டி வேக‌விட‌வும்.

7. க‌டைசியாக‌ முட்டையை ஊற்றி மீதி உள்ள் எண்ணையையும் சேர்த்து மூடி போட்டு வேக‌விட்டு, ம‌ற்ப‌க‌க்மும் பிர‌ட்டு வேக‌ விட்டு துண்டுக‌ளாக‌ வெட்டி விட‌வும். வெட்டி விட்டு ந‌ன்கு கிள‌றி ப‌ச்ச‌மிள‌காய், கொத்துமல்லி த‌ழை தூவி மீண்டும் ஒரு முறை பிர‌ட்டிவிட்டு இர‌க்க‌வும்.

8. சுவையான‌ முட்டை மூளை வ‌த‌க்க‌ல் ரெடி.ஆட்டு பாட்ஸில் மூளையை ப‌ல‌ வித‌மாக‌ செய்ய‌லாம், அப்படியே முழுசாக வ‌றுத்தும் எடுக்க‌லாம்.

இதை ஐந்து பேர் சாப்பிடலாம்.

Wednesday, July 8, 2009

கோதுமை பூரியும் பாஜியும்






கோதுமை பூரி

தே.பொருட்கள்
கோதுமை மாவு = கால் கிலோ
பட்டு போல் உள்ள ரவை = 25 கிராம்
சர்க்கரை = ஒரு தேக்கரண்டி
உப்பு = ஒரு தேக்கரண்டி
தண்ணீர் = ஒரு டம்ளர்
எண்ணை = இரண்டு தேக்கரண்டி

செய்முறை

  • கோதுமைமாவில் மேற்கண்ட அனைத்து பொருட்களையும் எண்ணை தவிர போட்டு குழைக்கவும்.

  • குழைக்கும் போது இடையில் ஒரு தேக்கரண்டி எண்ணையும், கடைசியில் ஒருதேக்கரண்டி எண்ணையும் சேர்த்து பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடவும்.

  • தண்ணீர் முதலில் முக்கால் டம்ளர் ஊற்றி குழைக்கவும், பிறகு தேவைக்கு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து குழைக்கவும்.
பாஜி

தேவையான பொருட்கள்

உருளை கிழங்கு = கால் கிலோ
வெங்காயம் = முன்று
த‌க்காளி = ஒன்று
மிள‌காய் தூள் = அரை தேக்க‌ர‌ண்டி
ம‌ஞ்ச‌ள் தூள் = அரை தேக்க‌ர‌ண்டி
உப்பு = முக்கால் தேக்க‌ர‌ண்டி
இஞ்சி = ஒரு தேக்க‌ர‌ண்டி (பொடியாக‌ அரிந்த‌து)
ப‌ச்ச‌ மிள‌காய் = முன்று (இர‌ண்டாக‌ ஒடித்து கொள்ள‌வும்)
கடுகு = அரை தேக்கரண்டி
முந்திரி = முன்று (பொடியாக‌ அரிந்து கொள்ள‌வும்)
உளுந்த‌ம் ப‌ருப்பு = அரை தேக்க‌ர‌ண்டி
கருவேப்பிலை = சிறிது
எண்ணை = நான்கு தேக்க‌ர‌ண்டி

செய்முறை

  • பூரிக்கு மாவு குழைக்கும் முன் உருளை கிழ‌ங்கை வேக‌ போட‌வும்.
  • உருளை கிழ‌ங்கை ந‌ன்கு ம‌ண் போக‌ க‌ழுவி இர‌ண்டாக‌ வெட்டி அதில் கால் தேக்க‌ர‌ண்டி உப்பு, கால் தேக்க‌ர‌ண்டி சேர்த்து மூழ்கும் அள‌விற்கு த‌ண்ணீர் ஊற்றி குக்க‌ரில் நான்கு ஐந்து விசில் விட்டு இர‌க்க‌வும்.ஆறியதும் தோலை உறித்து மசித்து வைக்கவும்.
  • ஒரு வாய‌க‌ன்ற‌ வான‌லியில் எண்ணையை காய‌வைத்து அதில் க‌டுகு,உளுத்த‌ம் ப‌ருப்பு, முந்திரி,க‌ருவேப்பிலை போட்டு தாளித்து வெங்காய‌ம் சேர்த்து வ‌த‌க்க‌வும்.
  • வெங்காய‌ம் வ‌த‌ங்கிய‌தும் த‌க்காளியை ஆறாக‌ அரிந்து சேர்த்து ப‌ச்ச‌மிள‌காய், இஞ்சியை சேர்த்து ந‌ன்கு வ‌த‌க்க‌வும்.

  • பிற‌கு மிள‌காய் தூள்,கால் தேக்க‌ர‌ண்டி ம‌ஞ்ச‌ள் தூள் , உப்பு அரை தேக்க‌ர‌ண்டி சேர்த்து இர‌ண்டு நிமிட‌ம் வ‌த‌ங்க‌ விட‌வும்.
  • ம‌சித்த‌ உருளையை சேர்த்து கிள‌றி கால் ட‌ம்ள‌ர் த‌ண்ணீர் சேர்த்து முடி போட்டு சிறிது நேர‌ம் சிறு தீயில் விட‌வும்.க‌டைசியாக‌ கொத்து ம‌ல்லி த‌ழை தூவி இர‌க்க‌வும்.
    குறிப்பு:

பூரி பாஜி என்ப‌து ரொம்ப‌சுல‌ப‌ம் தான் பல‌ வ‌கைக‌ளில் செய்ய‌லாம்.மைதாவில் செய்தால் உட‌னே சுட‌ சுட‌ சாப்பிட‌னும்.இது கோதுமையில் செய்வ‌தால் ப‌ள்ளிக்கோ ஆபிஸுக்கோ க‌ட்டி கண்டு போக‌லாம்.பூரியை எண்ணை ந‌ன்கு காய்ந்த‌தும் தீயின் அள‌வை மீடிய‌மாக‌ வைத்து சுட‌வும்.ஒரே சீராக‌ தேய்த்து போட‌னும். எண்ணையில் போட்ட‌தும் சும்மா சும்மா போட்டு கிண்ட‌க்கூடாது.ஒரு ப‌க்க‌ம் வெந்த‌தும் , உட‌னே ம‌றுப‌க்க‌ம் திருப்பி பொங்கி வ‌ரும் போது எடுத்து விட‌வேண்டும்.









குழந்தைகளுக்கு, ஆபிஸுக்கும் கட்டி கொடுக்கும் போது இப்படி ஓவ்வொரு பூரியிலும் பாஜியை தடவி மடக்கிவைத்தால் சாப்பிட ஈசியாக இருக்கும்.
(இந்த அயிட்டம் என் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பேவரிட் .முன்று பேரும் முன்று விதமா சாப்பிடுவர்கள். பெரியவர் பூரிக்கு பொட்டுகடலை துவையல், சின்னவர் பூரி சாம்பார் , எங்க அத்தானுக்கு பூரி பாஜி ரொம்பவே பேவரிட்) ஆபிஸ் கொண்டு போன பக்கத்து டேபுள் அரபிகளுக்கு கூட மூக்கை துளைத்து கேட்டு சாப்பிடுவார்கள்.)இந்த‌ பூரிக்கு மீன் குழ‌ம்பு, பீஃப் பிரை,ம‌ட்ட‌ன் குருமா, ம‌ட்ட‌ன் கூட்டு எல்லாம் ந‌ல்ல‌ இருக்கும்.





















Saturday, July 4, 2009

கிட்னி பிரை

கவனிக்க‌
என்னுடைய அனைத்து குறிப்புகளும் அருசுவைடாட்காமில் உள்ளது.சில ரெசிபிக்கள் மட்டும் இதில்
http://arusuvai.com/tamil/experts/3475 - jaleela

///இது ஆட்டு பாட்ஸில் இது கிட்னி பிரை ( ஈரல் என்பது வேறு) இது ஏற்கனவே பிரபல வெப் சைட்டில் வேறு ஒரு முறையில் கொடுத்துள்ளேன்.
சாப்பிட வாங்க‌
இந்த முறை சமையலறைடாட் காமில் மார்ச் மாதம் கொடுத்தேன், ஆனால் இந்த குறிப்பு எல்லோரையும் கவர்ந்துள்ளது,
இது எல்லாருடைய வெப் சைட் மூக்கையும் துளைத்து விட்டது/
ஆளுக்காள் அவரவர் வெப் சைட்டில் காப்பி செய்து போட்டு இருக்கிறார்கள், பிரபல மாத இதழ் ஒன்றிலும் வெளியாகி உள்ளது.
அதில் என் பிளாக்கிலும் நான் போட்டு கொள்கிறேன். செய்து ருசிக்க்கவும் சூப்பரான குழந்தைகளின் ஸ்மால் சிக்கன்.)கிட்னி பிரை...


தேவையான பொருட்கள்


ஆட்டு கிட்னி - கால் கிலோ
உப்பு தூள் - அரை தேக்கரண்டி (தேவைக்கு)
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
காஷ்மீரி சில்லி பொடி - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - முக்கால் தேக்கரண்டி
கொத்து மல்லி தழை - சிறிது
புதினா - முன்று இதழ்
பச்ச மிளகாய் - ஒன்று
வெங்காயம் - ஒன்று
பட்டை - சிறிய துண்டு (கால் இன்ச் அளவு)
கரம் மசாலா தூள் - ஒரு பின்ச்
தக்காளி ஒன்று - சிறியது

எண்ணை - இரண்டு தேக்கரண்டி
நெய் - கால் தேக்கரண்டி

செய்முறை

1. முதலில் கிட்னியை நடுவில் இருக்கும் கொழுப்பை மட்டும் அகற்றி விட்டு இரு முறை கழுவி மஞ்சள் தூள் சேர்த்து ஐந்து நிமிடம் ஊறவைக்கவும்.

2. பிறகு மறுபடி இருமுறை கழுவி தண்ணீரை வடிய விடவும்.
கிட்னியில் உப்பு , இஞ்சி பூண்டு பேஸ்ட், காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும், தக்காளியை நான்கு துண்டாக அரிந்து போடவும்.

3. கலக்கியதை ஐந்து நிமிடம் ஊறவைத்து குக்கரில் தண்ணீர் சேர்க்க வேண்டாம் முன்று விசி விட்டு இரக்கவும்.

4. இப்போது அதில் நிறைய தண்ணீர் நிற்கும் அதை வற்ற விடவும்.

5. தனியாக ஒரு வானலியில் ஒரு தேக்கரண்டி எண்ணை ஊற்றி பட்டை,வெங்காயம் மீடியமாக அரிந்து சேர்த்து தாளித்து வற்றிய கிட்னியை சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி பச்சமிளகாய் பொடியாக அரிந்து சேர்த்து கொத்துமல்லி, புதினா, நெய்,சேர்த்து கரம் மசாலா, தூவி கிளறி இரக்கவும்.

6. சுவையான கிட்னி பிரை ரெடி

குறிப்பு

இதை சரியாக கழுவ வில்லை என்றால் செய்யும் போது ஸ்மெல் வரும், ரொம்ப நேரம் வேக விட்டால் ரொம்ப கல்லு மாதிரி ஆகிடும்.
இதை குக்காரில் வேக வைத்து செய்வதால் குழந்தைகளுக்கு கடித்து சாப்பிட ஈசியாக இருக்கும்.
குழந்தைகளுக்கு இதை ஸ்மால் சிக்கன் என்று சொல்லி கொடுங்கள்.
காஷ்மீரி சில்லி பொடி என்பது நல்ல கலராக இருக்கும் காரம் அவ்வள்வாக இருக்காது.
அது கிடைக்க வில்லை என்றால் சாத மிளகாய் தூளே போதுமானது.
இதே போல் மிளகு சேர்த்தும் செய்யலாம்.
குழந்தைகளுக்கு,பிள்ளை பெற்றவர்களுக்கு நெயிலேயே கூட செய்து கொடுக்கலாம்,

Wednesday, July 1, 2009

இடியாப்பம் வதக்கல்






  • இடியாப்ப‌ம் எண்ணை இல்லாத‌ அயிட்ட‌ம் அதை நாம் ப‌ல‌வ‌கையாக‌ ந‌ம் விருப்ப‌த்திற்கு ஏற்ற‌வாறு செய்ய்ய‌லாம்.

    இது பார்க்க வெள்ளையாக இருக்கும் பச்சமிளகாய், வெங்காயம், மிளகு சேர்த்து செய்வது.
  • இது நம் விருப்பத்திற்கு ஏற்ப தேங்காய் பால் ஊற்றியோ, பீர்ணி தொட்டோ சாப்பிடலாம்.
  • முட்டை இடியாப்பம் வதக்கல் (இரண்டு முறையில் செய்யலாம், வெள்ளையாகபச்சமிளகாய் சேர்த்து , அல்லது மிளகாய் தூள் சேர்த்து)கீமா சேர்த்து வ‌த‌க்குவது, காய்க‌றிக‌ள் சேர்த்து வ‌த‌க்குவ‌து, இடியாப்ப‌ பிரியாணி

    தே.பொருட்க‌ள்



    இடியாப்பம் = நான்கு
    முட்டை = முன்று
    மிளகு = அரை தேக்கரண்டி
    பச்ச மிளகாய் = முன்று
    வெங்காயம் = முன்று
    உப்பு = தேவைக்கு
    சர்க்கரை = அரை தேக்கரண்டி
    நெய் = அரை தேக்கரண்டி
    எண்ணை முன்று = தேக்கரண்டி
    ப‌ட்டை = சிறிய‌ துண்டு
    இஞ்சி பூண்டு பேஸ்ட் = கால் தேக்கரண்டி
    கொத்து மல்லி தழை = சிறிது (கடைசியில் மேலே தூவ)

    செய்முறை

    1 இடியாப்பத்தில் லேசாக பால் (அ) தண்ணீர் தெளித்து உதிர்த்து கொள்ளவும்.
    வெங்காயம் பச்ச மிளகாயை பொடியாக நருக்கிக்கொள்ளவும்.
  1. முட்டையில் மிளகு தூள்,உப்பு தூள் கால் தேக்கரண்டி,இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு அடித்து வைக்கவும்.
  2. வாயகன்ற வானலியை காயவைத்து, அதில் எண்ணையை ஊற்றி பட்டை சேர்த்து வெடிக்கவிடவும்.அடுத்து வெங்காய‌ம், ப‌ச்ச‌மிள‌காய் சேர்த்து வ‌த‌க்க‌வும்.ரொம்ப‌ சிவ‌ற‌ விட‌ கூடாது க‌ண்ணாடி போல் இருக்கும் போதே க‌ல‌க்கி வைத்துள்ள் முட்டையை ப‌ர‌வ‌லாக‌ வைத்து அடுப்பின் தீயின் அள‌வை ந‌ன்கு குறைத்து வைத்து வேக‌விட‌வும்.
  3. ஒரு ப‌க்க‌ம் வெந்த‌தும் தோசை பிர‌ட்டுவ‌து போல் பிர‌ட்டி ம‌றுப‌க்க‌த்தையும் வேக‌ விட‌வும்.உதிர்த்து வைத்துள்ள‌ இடியாப்ப‌த்தை சேர்த்து கிள‌ற‌வும்.
  4. முட்டை ரொம்ப‌ தூளாகாம‌ல் மெதுவாக‌ கிள‌ற‌வும்.க‌டைசியாக‌ நெய் ச‌ர்க்க‌ரை தூவி இர‌க்க‌வும்.

கொத்துமல்லி தழை தூவி பரிமாறவும்.

குறிப்பு


கார‌ம் அதிக‌ம் என்று நினைப்ப‌வ‌ர்க‌ள் ப‌ச்ச‌மிளகாயின் அள‌வை குறைத்து கொள்ள‌வும்.அல்ல‌து ப‌ச்ச‌மிள‌காயில் உள்ளே இருக்கும் விதைக‌ளை நீக்கி விட்டு அரிந்து சேர்க்க‌வும்.
இது பூப்பெய்திய‌ பெண்க‌ளுக்கு, பிள்ளை பெற்ற‌வ‌ர்க‌ளுக்கு அடிக்க‌டி செய்து கொடுக்க‌லாம். இடுப்புவ‌லி உள்ள‌வ‌ர்க‌ள் சுட‌ சுட‌ இடியாப்ப‌த்தில் தேங்காய் பால் சேர்த்து (தேவைபட்டால் சர்க்கரையும்) சாப்பிட்டால் வ‌லி குண‌மாகும்.
வ‌ய‌தான‌வ‌ர்க‌ளுக்கும் ரொம்ப‌ பிடிக்கும்
.

Saturday, June 27, 2009

கேசரி உருண்டை





இந்தியாவில் பெண் பார்க்கும் விஷேஷத்தில் இந்த சொஜ்ஜி , பஜ்ஜி இல்லாமல் இருக்காது.



இது சாதரணமான கேசரி (சொஜ்ஜி)தான், இந்த முறையில் செய்தால் பிள்ளைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.


வீட்டில் அடிக்கடி செய்ய நெய் , பட்டரின் அளவை குறைத்துக்கொள்ளலாம்.










தேவையான பொருட்கள்

ரவை = ஒரு கப்
பட்டர் = கால் கப்
சர்க்கரை = ஒரு கப்
நெய் = இரண்டு தேக்கரண்டி
பாதம், முந்திரி = ஐந்து
கிஸ்மிஸ் பழம் = ஆறு
ரெட் கலர் பொடி = இரண்டு பின்ச்









செய்முறை

நெயில் பாதம் ,முந்திரி பொடியாக அரிந்து,கிஸ்மிஸ் சேர்த்து கருகாமல் வறுத்து தனியாக வைக்கவும்.

பட்டரை உருக்கி அதில் ரவையை போட்டு லேசான பொன்னிறமாக வறுக்கவும்.

அதற்குள் பக்கத்து அடுப்பில் ரவை ஒரு கப்பிற்கு இரண்டு கப் அளவு தண்ணீர் எடுத்து அதில் கலர் பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.

கொதித்ததும் வறுத்து கொண்டிருக்கும் ரவையில் கொட்டி கை விடாமல், கட்டி தட்டாமல் ஊற்றி கிளறவும்.

ரவை சிறிது கெட்டியாகி வரும் போது சர்க்கரை கொட்டி கிளறி, வறுத்த முந்திரி,பாதம்,கிஸ்மிஸ் ஐ கலந்து இரக்கவும்.

ஆறியதும் அதை உருண்டைகளாக பிடித்தோ (அ) டைமண்ட் ஷேப்பிலோ கட் பண்ணவும்.

குறிப்பு

இப்படி செய்வதால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். பள்ளிக்கும் கொடுத்து அனுப்பலாம்.முந்திரி பாதத்தை பொடித்தும் போட்டு உருண்டைகளாக பிடிக்கலாம்.

Thursday, June 25, 2009

முன்று வகையான ராகி (கேழ்வரகு)சமையல்கள்


ராகி சேமியா புட்டு



தேவையான பொருட்கள்

ராகி சேமியா = கால் கிலோ
தேங்காய் = அரை மூடி
நெய் = ஒரு மேசை கரண்டி
சர்க்கரை = 200 கிராம்

செய்முறை

1. ராகி சேமியாவை லேசான வெண்ணீரில் போட்டு ஒரு நிமிடத்தில் வடிகட்டி விடவேண்டும்.
2.அதை இட்லி பானையில் ஈரதுணியை விரித்து அவித்து எடுக்கவும்.
3. அதில் நெய்யை உருக்கி ஊற்றி, சர்க்கரை சேர்த்து தேங்காயை துருவி சேர்த்து நன்கு கலக்க்கவும்.
சுவையான ராகி சேமியா புட்டு ரெடி.
குழந்தைகள் இனிப்பு நுடுல்ஸ் என்று விரும்பி சாப்பிடுவார்கள்.






ராகி சேமியா உப்புமா












தேவையான‌ பொருட்க‌ள்

ராகி சேமியா = 100 கிராம்
தாளிக்க‌
எண்ணை = இரண்டு தேக்கரண்டி
கடுகு = கால் தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு = அரை தேக்கரண்டி
வெங்காயம் = ஒன்று
பூண்டு = இரண்டு பல்
கருவேப்பிலை = சிறிது
ப‌ச்ச‌மிள‌காய் = ஒன்று
காஞ்ச‌ மிள‌காய் ‍= ஒன்று
எலுமிச்சை சாறு = அரை தேக்க‌ர‌ண்டி

செய்முறை

1. வெண்ணீரை கொதிக்க‌ விட்டு அதில் ராகி சேமியாவை போட்டு நூடுல்ஸ் செய்வ‌து போல் இர‌ண்டு முன்று நிமிட‌த்திற்குள் வ‌டித்து விட‌வும்.
2 .பிற‌கு வாய‌க‌ன்ற‌ வான‌லியில் எண்ணை காய‌வைத்து க‌டுகு, காஞ்ச‌ மிள‌காய், உளுத்த‌ம் ப‌ருப்பு, பூண்டு, வெங்காய‌ம், க‌ருவேப்பிலை போட்டு தாளித்து ப‌ச்ச‌மிள‌காயை இர‌ண்டாக‌ கீறி போட‌வும்.
3. வ‌டித்து வைத்துள்ள‌ ராகியை சேர்த்து கிள‌றி எலுமிச்சை சாறு சேர்த்து இர‌க்க‌வும்.ட‌யாப‌ட்டீஸ் பேஷ‌ன்ட்டுக‌ளுக்கு ஏற்ற‌ உண‌வு இது.
இதை சிக்க‌ன் ம‌ட்ட‌ன் சேர்த்து காய்க‌ள் சேர்த்து செய்து சாப்பிட‌லாம்.





















ராகி கஞ்சி (பானம்)

நான்கு மாத கை குழந்தை முதல் வயதான பெரியவர்கள் வரை குடிக்கும் சத்தான பானமாகும்.உடல் சேர்வை நீக்கும், பசி தாங்கும் பானமும் ஆகும்.

தேவையான பொருட்கள்

ராகி பவுடர் = இரண்டு மேசை கரண்டி
பால் = இரண்டு டம்ளர்
தண்ணீர் = முன்று டம்ளர்
சர்க்கரை = 10 தேக்கரண்டி
ஏலக்காய் = முன்று
சாப்ரான் (குங்கும பூ) = கால் தேக்கரண்டி
நெய் = கால் தேக்கரண்டி


முதலில் ராகி பவுடரில் பாதி அளவு தண்ணீர் விட்டு கலக்கி டீ வடிகட்டி கொண்டு வடிக்கட்டவும்.
மீண்டும் அந்த வடித்த கப்பியில் மீதி தண்ணீரை ஊற்றி வடிக்கவும்.
ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஏலக்காய் சேர்த்து காய்ச்சவும்.
ராகி வெந்து கஞ்சி பதத்திற்கு வரும் போது பால் சேர்த்து சர்க்கரை சேர்த்து கொதிக்க விட்டு அதில் சாப்ரானை தூவி நெய் உருக்கி ஊற்றி இரக்கவும்.

குறிப்பு

கை குழதைகளுக்கு பால் சேர்க்காமல் மெல்லிய வெள்ளை மல் துணியில் ஆறிய வெண்ணீரில் கலக்கி வடித்து பிறகு காய்ச்சி கொடுக்கவும்.
ஆறு மாதத்திற்கு பிறகு என்ன பால் பார்முலா மில்க் சேர்ந்து காய்ச்சி கொடுக்கலாம்.
எட்டு மாதத்திலிருந்து ராகியுடன் பொட்டுகடலை,கோதுமை,அரிசி, ஜவ்வரிசி, பாதம் எல்லாம் சேர்த்து மிஷினில் கொடுத்து திரித்து காய்ச்சி கொடுக்கலாம், குழந்தைகளுக்கு தெம்பையும் புஷ்டியையும் கொடுக்கும்.
முழு ஏலக்காயிக்கு பதில் பொடியும் சேர்த்து கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு ஒரிரு இதழ் சாப்ரான் போட்டு காய்ச்சி விட்டு பிறகு அதை எடுத்து விட்டு கொடுக்கவும்.
சில குழந்தைகளுக்கு வாயில் தட்டினால் வாமிட் வரும்.
வயதானவர்கள் நெய் சேர்க்காமல் கொஞ்சமா சர்க்கரை சேர்த்து காய்ச்சி குடிக்கலாம்.இதை கூழ் போல கட்டியாக காய்ச்சியும் ஸ்பூனால் ஊட்டி விடலாம்.
ரொம்ப மாவை அள்ளி போட்டு சரியாக வேக வில்லை என்றால் பிள்ளைகளுக்கு பிடிக்காது.காலையிலிருது மதியத்துக்கும் கொடுக்கனும், மாலை இரவு வேண்டாம்.
(வயலில் ஏர் உழபவன் ஒரு கோப்பை கேப்பங்கஞ்சியை (ராகியை) குடித்து விட்டு தான் ஏர் உழுகிறான்). உடலுக்கு அவ்வளவு தெம்பை கொடுக்கும்.
குழந்தைகள் பள்ளி செல்ல ஆரம்பிக்கும் போது சாப்பிட வில்லையே என்று கவலை பட தேவையில்லை, இது ஒரு டம்ளர் கொடுத்தால் போதும் நிம்மதியா இருக்கலாம்.





Wednesday, June 24, 2009

அவசர மாங்காய் ஊறுகாய்





இதுக்கு புளிப்பும் இனிப்பும் சேர்ந்த கிளிமூக்கு மாங்காயாக இருந்தால் நல்ல இருக்கும்.


ஒரு பெரிய மாங்காய் = ஒன்று
உப்பு = தேவைக்கு
மஞ்சள் தூள் = கால் தேக்கரண்டி
வெல்லம் = ஒரு சின்ன துண்டு

வறுத்து பொடிக்க
காஞ்ச மிளகாய் = நான்கு
வெந்தயம் ‍ = கால் தேக்கரண்டி
தனியா = அரை தேக்கரண்டி
தாளிக்க‌
எண்ணை = இரண்டு மேசை கரண்டி
கடுகு = அரை தேகக்ரண்டி
காஞ்ச மிளகாய் ‍= ஒன்று
கருவேப்பிலை = சிறிது
பூண்டு = முன்று பல்

1 . வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை கொஞ்சமா எண்ணையில் வறுத்து ஆறியதும் பொடித்து கொள்ள‌வும்.
2. மாங்காய‌யை பொடியாக‌ அரிந்து கொள்ள‌வும், கொட்டையை தூக்கி போட்டுவிட‌ வேண்டாம் அதை சாம்பார் (அ) மீன் குழ‌ம்பில் போட்டு கொள்ள‌லாம்.
3. ஒரு வான‌லியில் எண்ணை விட்டு தாளிக்க‌ கொடுத்துள்ள‌வைக‌ளை தாளிக்க‌வும்.
4. மாங்காயை போட்டு கிள‌ற‌வும். உப்பு, ம‌ஞ்ச‌ள் பொடி சேர்த்து பொடித்த‌ பொடியையும் போட்டு ந‌ன்கு பிற‌ட்டி ஐந்து நிமிட‌ம் வேக‌விட்டு க‌டைசியாக‌ வெல்ல‌த்தை தூவி இர‌க்க‌வும்.

செய்யும் போதே நாவில் நீர் ஊற‌ ஆர‌ம்பித்து விடும்.
அப்ப‌டியே இர‌ண்டு முன்று நாட்க‌ளில் சாப்பிட்டு முடிக்க‌ வேண்டிய‌து தான். க‌ரிபிணி பெண‌க‌ள் வாய்க்கு ருசிப‌டும், ஏன் ந‌ம‌க்குதான்.
குறிப்பு
வ‌றுத்து பொடிக்க‌ சோம்பேறி த‌ன‌மா அப்ப‌டியே எண்னையில் போட்டு தாளிக்க‌வும், மிள‌காய் தூள் ஒரு தேக‌க்ர‌ண்டி, வெந்த‌ய‌ பொடி (அ) வெந்த‌ய‌ம், தாளித்தும் எண்ணையில் போட்டு விட்டு பிற‌கு மாங்காயை போட்டு பிற‌ட்ட‌வும், க‌ல‌ரும் சூப்ப‌ராக‌ வ‌ரும்.

Monday, June 22, 2009

KFC லாலிபாப்





///இப்போது குழ‌ந்தைக‌ள் அதிக‌மாக‌ விரும்புவ‌து KFC சிக்க‌ன் தான் அந்த‌ அள‌விற்கு சுவை இல்லை என்றாலும் ஓர‌ள்விற்கு ந‌ல்ல‌வே இருக்கும். வெரும் ப‌ருப்பு சாத‌த்திற்கும் ந‌ல்ல‌ இருக்கும்.//


தேவையான‌ பொருட்க‌ள்



ஊறவைக்க


லெக் பீஸ் - எட்டு துண்டு
இஞ்சி - இரண்டு அங்குல துண்டு
பூண்டு - ஐந்து பல்
தக்காளி = அரை
வெங்காயம் - அரை
உப்பு - தேவைக்கு
பேக்கிங் பவுடர் = அரை தேக்கரண்டி

பிரட்டி கொள்ள


மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மைதா - அரை கப்
கார்ன் மாவு - கால் கப்
உப்பு - சிறிது
எண்ணை பொரிக்க தேவையாண அளவு

செய்முறை


1. சிக்கனை நன்கு கழுவி தண்ணீரை வைக்கவும்.
2. வெங்காயம் இஞ்சி பூண்டு தக்காளி அனைத்தையும் அரைத்து அதில் உப்பு பேக்கிங்க் பவுடர் சேர்த்து சிக்கனில் ஊற்றி நன்கு பிசறி , முழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி முன்று மணி நேரம் ஊறவைக்கவும்

3. மைதா, கார்ன் மாவில் மிளகாய்தூள் மற்றும் உப்பை கலந்து ஊறிய சிக்கனை தண்ணீரை வடித்து இதில் பிரட்டி பொரித்தெடுக்கவேண்டும்.


4.பொரிக்கும் போது தீயை மீடியமாக வைத்து மூடி போட்டு நன்கு வெந்ததும் தீயை ஹயில் வைத்து பொரித்தெடுக்கவும்.
5. எண்ணையுடன் சிறிது பட்டர் சேர்த்து பொரித்தால் இன்னும் நல்ல இருக்கும்.

Saturday, June 20, 2009

கொத்து மல்லி கருவேப்பிலை ரசம்






//உணவு உண்ட பின் செரிமானத்துக்கு ரசம் ஒரு அருமையான உணவு, இதில் ரசத்தில் தாளிக்கும் கருவேப்பிலை மற்றும் கடைசியாக மேலே தூவும் கொத்து மல்லி புதினா கொண்டு தயாரிக்கும் விதம்.
கொத்தும‌ல்லி கீரை ந‌ம‌து உட‌லில் ர‌த்த‌தை சுத்த‌ப்ப‌டுத்துகிற‌து, கர்பிணி பெண்களின் வாய்க்கு ருசி ப‌டும், க‌ருவேப்பிலையை (முடி வ‌ள‌ர , முடி கொட்டும்பிரச்சனைக்கு) தேங்காய் எண்ணை (அ) ந‌ல்லெண்ணையில் காய‌வைத்து பொடித்து த‌லைக்கு தேய்பார்க‌ள், அதை உண‌வாக‌ உட்கொள்வ‌த‌ன் கூடுதல் பலன் .கிடைக்கும்.
ஜுர‌ம் வ‌ந்து வாய் க‌ச‌ப்பாக‌ இருப்ப‌வ‌ர்க‌ளுக்கு செய்து கொடுத்தால் வாய்க்கு ருசி ப‌டும். க‌ல்யாண‌ விட்டில் பிரியாணி சாப்பிட்டு இரவு வெரும் ர‌ச‌ம் சாதம், மாசி தொட்டு கூட சாப்பிட‌லாம். //


தேவையான‌ பொருட்க‌ள்
****************************
புளி = ஒரு சிறிய‌ ஒன்ன‌றை எலுமிச்சை அளவு
உப்பு = ருசிக்கு
ரசப்பொடி = ஒரு தேக்க‌ர‌ண்டி
ம‌ஞ்ச‌ள் பொடி = கால் தேக்க‌ர‌ண்டி

அரைத்து கொள்ள‌
***************** *
ந‌ன்கு ப‌ழுத்த‌ த‌க்காளி = ஒன்று
கொத்தும‌ல்லி = ஒரு கைப்பிடி
க‌ருவேப்பிலை = ஒரு கைப்பிடி
மிள‌கு = ஒரு தேக்க‌ர‌ண்டி
ப‌ச்ச‌ மிள‌காய் = ஒன்று
பூண்டு = நான்கு ப‌ல்
சீர‌க‌ம் = ஒரு தேக்க‌ர‌ண்டி
தாளிக்க‌
எண்ணை = ஒரு தேக்க‌ர‌ண்டி
நெய் = ஒரு தேக்க‌ர‌ண்டி
க‌டுகு = அரை தேக்க‌ர‌ண்டி
வெந்தயம் = 5 எண்ணிக்கை
பெருங்காய‌ம் = ஒரு சிட்டிக்கை
க‌ருவேப்பிலை = 5 இதழ்
கொத்து ம‌ல்லி சிறிது


செய்முறை


1.புளியை க‌ழுவி சுடுத‌ண்ணீரில் க‌ரைத்து முன்று ட‌ம்ள‌ர் அள‌விற்கு வைக்க‌வும்.


2. கொத்தும‌ல்லி, க‌ருவேப்பிலையை ஆய்ந்து ம‌ண்ணில்லாம‌ல் க‌ழுவி த‌ண்ணீரை வ‌டிக்க‌வும்.


3. இப்போது அரைக்க‌ கொடுத்துள்ள‌வைக‌ளை முத‌லில் மிள‌கு சீர‌க‌த்தை அரைத்து கொண்டு அத்துட‌ன் த‌க்காளி, பூண்டு, கொத்தும‌ல்லி, ப‌ச்ச‌மிள‌காய், க‌ருவேப்பிலை ஆகிய‌வ‌ற்றை சேர்த்து அரைத்து (அரைத்த‌து + மிக்சியில் இருந்து வ‌ழித்தெடுத்த‌து) இர‌ண்டு ட‌ம்ள‌ர் அள‌வு.


4. இப்போது க‌ரைத்து வைத்திருக்கும் புளி த‌ண்ணீருட‌ன் அரைத்த‌ க‌ல‌வை, ர‌ச‌ப்பொடி, உப்பு,ம‌ஞ்ச‌ள் பொடி சேர்த்து ந‌ன்கு கொதிக்க‌ விட‌வும்.


5. இப்போது தாளிக்க‌ கொடுத்துள்ள‌வைக‌ளை க‌ரிகாம‌ல் தாளித்து கொதித்து வைத்திருக்கும் க‌ல‌வையில் ஊற்றி கொத்தும‌ல்லி த‌ழை தூவி இர‌க்க‌வும்.


6. க‌ம‌ க‌ம‌ன்னு கொதிக்கும் போது உங்க‌ள் ர‌ச‌ம் வாசனை எட்டு வீட்டு மூக்கை துளைக்கும்.


குறிப்பு
ர‌சத்தை ப‌ல‌வ‌கையாக‌‌ வைக்க‌லாம். த‌க்காளி ர‌ச‌ம், அரைத்து விட்ட‌ ர‌ச‌ம்,தேங்காய் பால் ர‌ச‌ம், எலுமிச்சை ர‌ச‌ம், அன்னாச்சி ப‌ழ‌ ர‌சம்.
வாங்கும் ஊட்டி புளிப்பா போச்சா க‌வ‌லை வேண்டாம் அதிலும் ர‌ச‌ம் த‌யாரிக்க‌லாம்.இதில் ஒரு சிறிய‌ பிட்டு வெல்ல‌ம் போட்டாலும் ந‌ல்ல‌ இருக்கும்.
இது சுமார் ஆறு பேர் சாப்பிட‌லாம்

Tuesday, June 16, 2009

சைனா கிராஸ் (கடற்பாசி)







கடற் பாசி என்னும் சைனா கிராஸ் இது நோன்பு காலங்களில் இஸ்லாமியர்களின் இல்லங்களில் நோன்பு திறக்க செய்யும் பல வகை உனவு களில் இதுவும் ஒரு வகையாகும்.
கடற்பாசியை ரோஸ் எஸன்ஸ் ஊற்றி பால் சேர்த்தும் செய்யலாம், இரண்டு வகையான கலர் சேர்த்து தனித்தனியாக செய்து கலந்து கலர்புல்லாகவும் செய்யலாம்,இளநீரில் (அ) தேங்காய் உடைத்த தண்ணீரிலும் செய்யலாம், ஜூஸுக்கு கரைக்கும் டேங்கிலும் செய்யலாம்.


1. ரூ ஆப்ஷா கடற்பாசி





ரூ ஆப்ஷா என்பது பாக்கிஸ்தானியர்கள் பயன் படுத்துவது இது பாலில் கரைத்து குடிக்கும் பானம் இது உடல் சூட்டை தணிக்கும், வாய் புண் மற்றும் வயிற்று புண்ணையும் ஆற்றும்.


க‌ட‌ற்பாசி = ஒரு கைபிடி அள‌வு
ச‌ர்க்க‌ரை = இர‌ண்டு மேசை க‌ர‌ண்டி அள‌வு
பால் = ஒரு ட‌ம்ள‌ர்
ரூ ஆப்ஷா = இர‌ண்டு மேசை க‌ர‌ண்டி
பாத‌ம் = நான்கு


அரை ட‌ம்ள‌ர் த‌ண்ணீரில் க‌ட‌ற்பாசியை பொடியாக‌ அரிந்து போட்டு சிறிது நேர‌ம் ஊற‌வைத்து காய்ச்ச‌வும்.
க‌ரைந்து வ‌ரும் ச‌மைய‌த்தில் அதில் பாலை ச‌ர்க்க‌ரை சேர்த்து கொதிக‌க் விட்டு வ‌டிக‌ட்ட‌வும் ந‌ல்ல‌ க‌ரைந்து விட்டால் வ‌டிக‌ட்ட‌ தேவையில்லை.அதில் ரூ ஆப்ஷாவை க‌ல‌ந்து ஒரு த‌ட்டில் ஊற்றி அத‌ன் மேல் பாத‌த்தை தோலெடுத்து பொடியாக‌ அரிந்து தூவி விட்டு ஆற‌வைத்து பிரிட்ஜில் வைத்து குளிற‌விட‌வும்.ந‌ன்கு ஆறி செட்டான‌தும் வேண்டிய‌ வ‌டிவில் துண்டுக‌ள் போட்டு சாப்பிட‌வும்.

இள‌நீர் க‌ட‌ற்பாசி

இள‌நீர் = ஒன்று முழுவ‌தும்
ச‌ர்க்க‌ரை = ஒரு மேசை க‌ர‌ண்டி
தேவையான‌ ந‌ட்ஸ் = 4 பாத‌ம் (அ) பிஸ்தா, முந்திரி ‍
க‌ட‌ற் பாசி = ஒரு கை

க‌ட‌ற்பாசியை அரை ட‌ம்ள‌ர் த‌ண்ணீரில் பொடியாக‌ அரிந்து போட்டு ஊற‌வைத்து ந‌ன்கு க‌ரையும் வ‌ரை காய்ச்சி சர்க்கரை சேர்த்து இள‌நீரை ஊற்றி உட‌னே அடுப்பை அனைக்க‌வும்.ஒரு டிரே (அ) த‌ட்டில் ஊற்றி மேலே ந‌ட்ஸ் வ‌கைக‌ளை தூவி ஆற‌வைத்து குளிற‌வைத்து சாப்பிட‌வும்.
இது சாப்பிட‌ சாப்பிட‌ நிறைய‌ சாப்பிட‌னும் போல் தோன்றும் அவ்வ‌ள‌வு ருசியாக‌ இருக்கும்.

டேங்க் க‌ட‌ற்பாசி
க‌ட‌ற்பாசி = ஒரு கை பிடி அள‌வு
ச‌ர்க்க‌ரை = ஒரு மேசைக‌ர‌ண்டி அள‌வு
ஏதாவ‌து ஒரு பிளேவ‌ர் டேங்க் ப‌வுட‌ர் = இர‌ண்டு மேசை க‌ர‌ண்டி அளவு
த‌ண்ணீர் = இர‌ண்டு ட‌ம்ள‌ர்
ஒன்ன‌றை ட‌ம்ள‌ர் த‌ண்ணீரில் க‌ட‌ற்பாசியை க‌ரைத்து ஊற‌வைத்து ச‌ர்க‌க்ரை சேர்த்து ந‌ன்கு காய்ச்ச‌வும்.
ந‌ன்கு க‌ரைந்து வ‌ரும் போது டேங்க் ப‌வுட‌ரை க‌ல‌ந்த்து ஊற்றி ஒரு டிரேயில் ஊற்றி தேவையான நட்ஸ் வகையை ஊற்றி ஆற‌விட‌வும்.
ஆறிய‌தும் பிரிட்ஜில் வைத்து குளிற‌வைத்து சாப்பிட‌வும்.




Saturday, June 13, 2009

த‌க்காளி ம‌ற்றும் வெங்காய‌ ப‌ஜ்ஜி















தே.பொருட்க‌ள்

கடலை மாவு = அரை டம்ளர்
அரிசி மாவு = கால் டம்ளர்
இஞ்சி பூண்டு பேஸ்ட் = கால் தேக்கரண்டி
கரம் மசாலா தூள் = தேக்கரண்டி
உப்பு தூள் = தேவைக்கு
காஷ்மீரி சில்லி பொடி = அரை தேக்கரண்டி
ரெடி கலர் பொடி = பின்ச்
எண்ணை = ப‌ஜ்ஜி சுட‌ தேவையான‌ அள‌வு
ரெட் க‌ல‌ர் த‌க்காளி = இர‌ண்டு


செய்முறை

1. த‌க்காளியை வ‌ட்ட‌வ‌டிவ‌மாக‌ க‌ட் செய்து வைக்க‌வும்.


2. ப‌ஜ்ஜி க‌ல‌க்க‌ தேவையான‌ பொருட்க‌ளை ஒன்றாக‌ சேர்த்து த‌யிர் ப‌த‌த்திற்கு க‌ல‌க்கி ஐந்து நிமிட‌ம் ஊற‌வைக்க‌வும்.


3. எண்ணை காய்ந்த‌தும் ப‌ஜ்ஜிக‌ளாக‌ சுட்டெடுக்க‌வும்.
புளிப்பு சுவையுட‌ன் கூடிய‌ வித்தியாச‌மான‌ த‌க்காளி ப‌ஜ்ஜி ரெடி.


குறிப்பு
ப‌ஜ்ஜி வெங்காய‌ ப‌ஜ்ஜி சில‌ருக்கு எடுத்து தோய்த்து போடும் போது பிஞ்சி போய் விடும் அதுக்கு, வெங்காய‌த்தை வ‌ட்ட‌வ‌டிவ‌மாக‌ வெட்டி சிறிது நேர‌ம் பிரிட்ஜில் வைத்து எடுத்து பிற‌குதோய்த்தால் கொஞ்ச‌ம் கிரிப்பாக‌ நிற்கும்.
மிள‌காய் ப‌ஜ்ஜி ரொம்ப‌ கார‌மாக‌ இருந்தால் சிறிது உப்பு, வினிக‌ர் சேர்த்து ஊற‌வைத்து பிற‌கு சுட்டால் கார‌மும் தெரியாது, சுவையும் வித்தியாச‌மாக‌ இருக்கும்.








ப‌ஜ்ஜி ரொம்ப‌ ஈசியா த‌யாரித்து விட‌லாம். இதை வாழைக்காய், உருளை,முட்டை,அப்ப‌ளம், வெங்காயாம்,க‌த்திரிக்காய்,வெங்காய‌ம்,பேபிகார்ன் எலாவ‌ற்றிலும் இதை த‌யாரிக்க‌லாம்.க‌ட‌லை மாவு கேஸ் என்ப‌தால் அதில் சோம்பு (அ) இஞ்சி பூண்டு பேஸ்ட் (அ) பூண்டு பொடி (அ) பொருங்காய‌ப் பொடி அவ‌ர‌வ‌ர் விருப்ப‌த்திற்கு ஏற்றவாறு போட்டு கொள்ள‌லாம்.இல்லை எல்லாமே ஒரு பின்ச்சும் போடலாம்.
காய்க‌றி சாப்பிட‌தா குழ‌ந்தைக‌ளுக்கு இது போல் செய்து கொடுக்க‌லாம்.வீட்டில் உள்ள‌ காயை வைத்து நினைத்தால் நிமிஷ‌த்தில் த‌யாரித்து விட‌லாம்.
இத‌ற்கு தொட்டு கொள்ள‌ பொட்டு க‌ட‌லை துவைய‌ல், கெட்ச‌ப்,பேரிட்சை ச‌ட்னி , புதினா துவையல் எல்லாமே ந‌ல்ல‌ இருக்கும்.

Wednesday, June 10, 2009

முன்று வகையான இனிப்புமுட்டை தோசைகள்






வித விதமான தோசைகள்.

1. ஆட்டா மாவு இனிப்பு தோசை
*****************************************

கோதுமைமாவு (ஆட்டா) = இரண்டு டம்ளர்
முட்டை = முன்று
உப்பு ‍ ‍ ஒரு சிட்டிக்கை
சர்க்கரை = முக்கால் டம்ளர்
ஏலக்காய் = முன்று
தேங்காய் = பல்லாக கீரியது சிறிது
எண்ணை ‍= சுட‌ தேவையான‌ அள‌வு
நெய் = சிறிது

மிக்சியில் கோதுமை மாவுடன் மேலே குறீப்பிட்ட அனைத்து பொருட்களையும் தேங்காய் பல் தவிர தேவைக்கு தண்ணீர் ஊற்றி ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
அத்துடன் பொடியாக நருக்கி வைத்துள்ள தேங்காய் பல்லை சேர்த்து தோசைகளாக வார்க்கவும்.






2.முட்டை தோசை
***********************************
தோசை மாவு = ஒரு க‌ப்
முட்டை = இர‌ண்டு

ச‌ர்க்க‌ரை = நான்கு மேசை க‌ர‌ண்டி
நெய் + எண்ணை சுட‌ தேவையான‌ அள‌வு.

முட்டையில் ச‌ர்க்க‌ரையை போட்டு ந‌ன்கு க‌ரையும் வ‌ரை அடித்து வைக்க‌வும்.தோசை வார்க்கும் தவ்வாவில் ஒரு குழி கரண்டி அளவு தோசை மாவை ஊற்றி சுழற்றி உடனே முட்டை கலவையையும் முன்ற்ல் ஒரு பங்கு ஊற்ற்றி தோசை போலவே தேய்க்கவும்.
ஊற்றி சிறிது சுழ‌ற்றி விட்டு எண்ணை + நெய் க‌ல‌வையை விட்டு தனலை குறைத்து வைக்கவும். பிற‌கு அழ‌காக‌ புஸுன்னு பொங்கி ந‌ல்ல‌ வெந்து நிற்கும்.பார்க்க கலர் புல்லாகவும் இருக்கும்.
சுவையான‌ முட்டை தோசை ரெடி.




3. இனிப்பு மைதா தோசை
**************************************
மைதா மாவு = ஒரு கப்
முட்டை = இரண்டு
சர்க்கரை = அரை கப்
தேங்காய் பால் = அரை கப்
தண்ணீர் தேவைக்கு
உப்பு = ஒரு பின்ச்
பொடி ர‌வை = ஒரு மேசை க‌ர‌ண்டி


மைதா உடன் முட்டை,தேங்காய் பால்,ரவை, சர்க்கரை, உப்பு சேர்த்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து தோசைமாவு பதத்திற்கு கலக்கி 10 நிமிடம் ஊறவைக்கவும்.
இல்லை என்றால் மிக்சியிலும் அடித்து கொள்ளலாம்.
பிறகு தோசைகளாக வார்க்கவும். இது குழந்தைகளுக்கு ரொம்ப பிடித்த தோசை. அப்படியே வழுக்கி கொண்டு உள்ளே போகும், இன்னும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

பெரியவர்கள் முட்டை சர்க்கரைக்கு பதில் வெங்காயம், பச்சமிளகாய் சேர்த்து கலக்கி சுட்டு சாப்பிடலாம்.

Sunday, June 7, 2009

முருங்கக்கீரை பொரியல்




தே.பொருட்கள்

ஆய்ந்த கீரை = முன்று டம்ளர்
சின்ன வெங்காயம் = 200 கிராம்
தேங்காய் துருவல் = அரை முடி (முறி)
காஞ்ச மிளகாய்= ஐந்து
உளுந்து = ஒரு மேசை கரண்டி
பூண்டு = ஆறு ப‌ல்
சீர‌க‌ம் = இர‌ண்டு தேக்க‌ர‌ண்டி
உப்பு = தேவைக்கு
எண்ணை = ஆறு தேக்க‌ர‌ண்டி

செய்முறை




முருங்க‌க்கீரையை ஆய்ந்து முன்று ட‌ம்ள‌ர் அள்வு எடுத்து அல‌சி வ‌டித்து வைக்க‌வும்.
ஒரு வாய‌க‌ன்ற‌ வான‌லியை காய‌வைத்து அதில் காஞ்ச‌ மிள‌காய்,உளுந்து, சீர‌க‌ம், பூண்டு போட்டு தாளிக்க‌வும்.
பிற‌கு சின்ன‌ வெங்காய‌த்தை போட்டு வ‌த‌க்கி கீரையை சேர்த்து கிள‌றி தேவைக்கு உப்பு சேர்த்து கிள‌றி சிறிது நேர‌ம் வேக‌விட‌வும்.
க‌டைசியாக‌ தேங்காய் துருவ‌ல் சேர்த்து இர‌க்க‌வும்.
சுவையான‌ முருங்க‌க்கீரை பொரிய‌ல் ரெடி.

குறிப்பு:

தினம் சாப்பிடும் உண‌வில் கீரையை அதிக‌மாக‌ சேர்த்து கொள்வ‌து ந‌ல்ல‌து.
முருங்க‌க்கீரை க‌ர்பிணி பெண்க‌ளுக்கு மிக‌வும் ந‌ல்ல‌து.

Thursday, June 4, 2009

ஈரல் கூட்டு





தே.பொருட்க‌ள்





ஈரல் = கால் கிலோ

தக்காளி = ஒன்று

வெங்காயம் = இரண்டு

இஞ்சி பூண்டு பேஸ்ட் = ஒரு மேசை கரண்டி

மிள‌காய் தூள் = ஒரு தேக்க‌ர‌ண்டி

உப்பு தூள் = தேவைக்கு

ம‌ஞ்ச‌ள் தூள் = அரை தேக்க‌ர‌ண்டி

க‌ர‌ம் ம‌சாலா தூள் = கால் தேக்க‌ர‌ண்டி

ப‌ச்ச‌ மிள‌காய் = இர‌ண்டு (பொடியாக‌ அரிந்த‌து)

கொத்து மல்லி தழை = சிறிது

ப‌ட்டை = ஒரு சிறு துண்டு

எண்ணை = நான்கு தேக்கரண்டி







செய்முறை



1. ஈர‌லை சுத்த‌ம் செய்து மேலே உள்ள‌ மெல்லிய‌ இழையை இர‌ண்டு முன்று முறை க‌ழுவி த‌ண்ணீரை வ‌டிக்க‌வும்.



2. ஒரு வாய‌க‌ன்ற‌ வான‌லியை காய‌வைத்து அதில் எண்ணை ஊற்றி ப‌ட்டை போட்டு வெடிக்க‌ விட‌வும்.



3.அடுத்து வெங்காய‌ம் + இஞ்சி பூண்டு + த‌க்காளியை ஒன்ற‌ன் பின் ஒன்றாக‌ வ‌த‌க்க‌வும்.

4.த‌க்காளி சுருண்ட‌தும் ஈரலை போட்டு உப்பு + ம‌ஞ்ச‌ள் தூள் சேர்த்து அதிக‌ தீயை வைத்து கிள‌ற‌வும்.



5.அடுத்து மிள‌காய் தூள்,க‌ர‌ம் ம‌சாலா தூள் சேர்த்து கிள‌றி தீயை குறைத்து வைத்து மூடி போட்டு சிறிது நேர‌ம் வேக‌ விட‌வும்.

6. க‌டைசியாக‌ கொத்தும‌ல்லி த‌ழை ம‌ற்றும் ப‌ச்ச‌ மிள‌காயை பொடியாக‌ ந‌ருக்கி சேர்த்து கிள‌றி இர‌க்க‌வும்.





குறிப்பு:



ஆட்டு ஈர‌ல் இர‌த்த‌ம் க‌ம்மியாக‌ இருப்ப‌வ‌ர்க‌ளுக்கு மிக‌வும் ந‌ல்ல‌து.

ரொம்ப‌ நேர‌ம் வேக‌ விட்டால் க‌ல்லு மாதிரி ஆகிவிடும். க‌ருப்பாக‌வும் ஆகிவிடும்.ஹிமோகுளொபின் க‌ம்மியாக‌ இருப்ப‌வ‌ர்க‌ள், க‌ர்பிணி பெண்க‌ள் இதை வார‌ம் முன்று முறை சாப்பிட்டால் இர‌த்த‌த்தின் அள‌வு கூடும்.







Saturday, May 30, 2009

முழு மீன் டீப் பிரை





//துபாயில் ஜுமேரா பீச்சில் இரவில் குளிர்காலத்தில் ஒரு சிறிய பொட்டி கடை போல் இருக்கும். அங்கு அரேபியர்களும், இந்திய கூட்டமும் அலை மோதும் இந்த முழு மீன் சாப்பிட. இது கிரில், சுடுவது எல்லாம் கிடையாது, அப்படியே எண்ணையில் போட்டு ஒரு வயகன்ற ஆழ கிடாயில் போட்டு பொரித்து எடுப்பது.
இது ஒரு பெரிய டேபிளில் நடுவில் இந்த மீனை வைத்து சுற்றி எல்லோரும் மொத்தமாக உட்கார்ந்து குபூஸுடன் சாப்பிடுவார்கள்.
அங்கு பல வகையான பெரிய பெரிய மீன்கள் இருக்கும் நாம் எதை காண்பிக்கிறோமோ அதை உடனே நம் கண் முன்னால் பொரித்து தருவார்கள்.
அதே போல் நாம் வீட்டிலும் குடும்பத்தோடு இது செய்து சாப்பிடலாம்.//



தே.பொருட்க‌ள்

முழு மீன் = இரண்டு
உப்பு = தேவைக்கு
காஷ்மீரி சில்லி பொடி = ஒரு மேசை கரண்டி
இரண்டு தேக்கரண்டி (அ) முழு பூண்டில் பாதி (பூண்டை அரைத்தும் போடலாம்).
பூண்டு பொடி = ஒரு தேக்கரண்டி (அ)
மிளகு தூள் = அரை தேக்கரண்டி
க‌ர‌ம் ம‌சாலா தூள் = அரை தேக்க‌ர‌ண்டி
ரெட் க‌ல‌ர் பொடி ‍ = இர‌ண்டு சிட்டிக்கை (தேவைப‌ட்டால்)
எலுமிச்சை சாறு = ஒரு மேசை க‌ர‌ண்டி

செய்முறை


மீனை முழுசாக‌ க‌ழுவி சுத்த‌ம் செய்து வ‌யிற்றில் உள்ள‌ அழுக்கை அக‌ற்றி விட்டு சைடில் உள்ள‌ முள்ளை க‌த்திரியால் க‌ட் ப‌ண்ண‌வும்.
அதில் மேலே குறிப்பிட்ட‌ அனைத்து ம‌சாலாக்க‌ளையும் போட்டு ஊறவைக்கவும்.
ஒரு வாயகன்ற பெரிய பேனில் எண்ணை ஊற்றி நல்ல நிதானமாக மொருகலாக பொரித்தெடுக்கவும்.

குறிப்பு:


நிறைய ஊர் களிலும் இது போல் மீனை முழுசாக பொரித்து கொடுக்கிறர்கள், ஆனால் எண்ணை பழசாக கூட இருக்கலாம், வீட்டில் நாம் ஆரோக்கியமாக செய்து சாப்பிடலாம்.
இருக்கும்
சாலட், குபூஸுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
அவரவர் விருப்பமான மீனை முழுசாக பொரித்து குடும்பத்துடன் சாப்பிட்டு மகிழுங்கள்.

Monday, May 25, 2009

உளுவா கஞ்சி (சுகப்பிரசவத்திற்கு)


தே.பொருட்கள்
**************************


அரிசி = கால் கப்
வெந்தயம் = ஒரு மேசை கரண்டி
பனைவெல்லம் = ஒரு பெரிய துண்டு
தேங்காய் பால் = அரை முறி
முட்டை = ஒன்று
பூண்டு = ஒரு முழு பூண்டு

செய்முறை
**************************

1.அரிசியை பொடித்து அத்துட‌ன் வெந்த‌ய‌ம் சேர்த்து ந‌ன்கு ஊற‌வைக்க‌வும்.

2.தேங்காயை முத‌ல் பால், இர‌ண்டாம் பால் எடுத்து வைக்க‌வும்.

3. பூண்டு, ஊறிய அரிசி மற்றும் வெந்தயத்தை இரண்டாம் தேங்காய் பால் ஊற்றி வேக வைக்கவும்.

4. ந‌ன்கு வேக‌வைத்து அதில் வெல்ல‌த்தை இள‌க்கி வ‌டிக்க‌ட்டி சேர்த்து கிள‌ற‌வும்.

5.முத‌ல் தேங்காய் பாலில் முட்டையை ந‌ன்கு க‌ல‌க்கி கொண்டு வெந்து கொண்டிருக்கும் அரிசி க‌ல‌வையோடு சேர்த்து கட்டி பிடிக்கமல் ந‌ன்கு கிள‌ற‌வும்.

நிறை மாத கர்பிணி பெணகளுக்கு சுகப்பிரசம் ஆக இந்த உளுவா கஞ்சியை செய்து கொடுக்கலாம்


குறிப்பு:

இது க‌ர்பிணி பெண்க‌ளுக்கு பிள்ளை பெறும் நேர‌த்தில் கொடுக்க‌வும். உட‌ல் சூட்டை த‌ணிக்கும்.
க‌ட்டியாக‌ காய்ச்சினா முன்று ட‌ம்ள‌ர் அள‌விற்கு வ‌ரும், கொஞ்ச‌ம் த‌ண்ணி மாதிரி காய்ச்சினால் ஐந்து ட‌ம்ள‌ர் வ‌ரும்.

குளுமை உடம்பு உள்ளவர்கள் வெந்தயத்தை சிறிது குறைத்து போடவும்


இந்த கஞ்சியை கர்பிணி பெண்கள் நிறைமாததில் சாப்பிடுவதால் கர்ப்ப பை வாய் இளக்க்ம் கொடுத்து வயிற்றில் உள்ள வாயுவை கலைத்து சுகப்பிரசவம் ஏற்பட உதவும்.

உடல் சூடு மற்றும் கேஸ் பிராப்ளம் உள்ளவர்களும் இதை செய்து சாப்பிடலாம்

Wednesday, May 20, 2009

பூண்டு பெருங்காய உருண்டை

தே.பொருட்க‌ள்

ஒரு முழு பூண்டு ‍= சுட்டது
பெருங்காய‌ம் = ஒரு தேக்க‌ர‌ண்டி முழுவ‌தும்
ப‌னை வெல்ல‌ம் ‍ = இர‌ன்டு மேசைக‌ர‌ண்டி முழுவ‌தும்
நெய் = ஒரு தேக்க‌ர‌ண்டி

செய்முறை


பூண்டை முழுசாக‌ க‌த்தியில் குத்தி சுட‌வேண்டும்.
தோல் உரித்து அதை மையாக‌ அரைத்து, வெல்ல‌த்தை தூள்செய்து போட்டு, பெருங்காய‌ப்பொடடி சேர்த்து ந‌ன்கு பிசைந்து அதில் நெய்யை உருக்கி ஊற்றி முன்று உருண்டைக‌ளாக‌ பிடித்து வைக்க‌வும்.
அப்ப‌டியே முழுங்கி சுக்கு காப்பி குடிக்க‌வும்.

குறிப்பு:

இது வ‌யிற்றில் உள்ள‌ அழுக்கு, கேஸ் எல்லாத்தையும் வெளியாக்கும்.
இது சாப்பிட்டு விட்டு வேறு எதுவும் இரண்டு மணி நேரத்திற்கு சாப்பிட‌ கூடாது.

Saturday, May 9, 2009

மினி தந்தூரி பிட்சா










பிட்சா மேல் வைக்கும் பில்லிங்
******************************
சிக்கன் எலும்பில்லாதது = 200 கிராம்
தந்தூரி சிக்கன் மசாலா - ஒரு தேக்கரண்டி
மிளகு தூள் - கால் தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை தேக்கரண்டி
தயிர் - ஒரு தேக்கரண்டி
உப்பு - அரைதேக்கரண்டி
கரம் மசாலா - கால் தேக்கரண்டி
பிட்சா மேலே தூவ
*******************
மொஜெரெல்லா சீஸ் - 12 தேக்கரண்டி(அ) தேவைக்கு
பிட்சா சாஸ் - 12 தேக்கரண்டி (அ) தேவைக்கு
கேப்ஸிகம் - கால் கப் (பொடியாக அரிந்தது)
பச்சை (அ) கருப்பு ஆலிவ் காய் - 12 (கொட்டை நீக்கி பொடியாக அரிந்தது)
டொமேட்டோ கெட் - 12 தேக்கரண்டி (அ) தேவைக்கு
பிட்சா மாவு தயாரிக்க
********************
மைதா - 200 கிராம் (ஒரு டம்ளர்)
கோதுமை - அரை கப்பிற்கு சிறிது கம்மியாக
ஓட்ஸ் பவுடர் - நாலு தேக்கரண்டி
இன்ஸ்டன்ட் ஈஸ்ட் - ஒன்னறை தேக்கரண்டி
சூடான பால் - அரை கப்
தண்ணீர் -பிசையதேவைஅன அளவு
சர்க்கரை - இரண்டு தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
சிக்கன் தாளிக்க
****************
எண்ணை - ஒரு தேக்கரண்டி
பட்டர் - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
தக்காளி பேஸ்ட் - ஒரு மேசை கரண்டி (தேவை பட்டால்)

செய்முறை

1. முதலில் மாவு தயாரிக்க

சூடான பாலில் ஈஸ்ட், உப்பு ,சர்க்கரை போட்டு சிறிது நேரம் கழித்து மைதா, கோதுமை, ஓட்ஸ் மாவில் பட்டர் போட்டு பிசைந்து அதில் ஈஸ்ட் கலவையை ஊற்றி, தேவைக்கு தண்ணீர் ஊற்றி நன்கு குழத்து முன்று மணி நேரம் மூடி வைக்கவும்.
முன்று மணி நேரம் கழித்து மாவு கல சிறிது பொங்கி வரும் அதை மீண்டு குழைத்து சிறு பூரிக்கு போடும் உருண்டைகளாக போட்டு வித்து கொள்ளவேண்டும்.

2.சிக்கனை சுத்தம் செய்து கழுவி தண்ணீரை வடித்து அதில் சிக்கனில் கலக்க வேண்டிய மசக்களை சேர்த்து அரை மணி நேரம் ஊறவைத்து தோசை தவ்வாவில் பட்டர் + எண்ணை ஊற்றி வெங்காயம் பொட்டு வதக்கி சிக்கன் கலவையை சேர்த்து நனுகு டிரையக வதக்கவேண்டும்.

3 கேப்ஸிகம்,ஆவில் காய் பொடியாக நீளவாக்கில் அரிந்து வைக்கவேன்டும்.

4. இப்போது பிட்சா உருண்டைகள், சீஸ்,சாஸ்,கேப்ஸிகம் மற்றும் ஆலிவ் காய்கள், சிக்கன் கலவையை தயார்.
ஓவனை 180 டிகிரி 15 நிமிடம் பிரீ ஹீட் செய்ய வேண்டும் அதற்குள் பூரி அளவில் உள்ள உருண்டைகளை ஒரு தட்டில் வைத்து நாளு விரல்களால் நல்ல உள்ளங்கை அள்விற்கு தேய்த்து அதில் முதலில் பிட்சா சாஸை பரவலாக தடவவும்.அடுத்து சிக்கன் கலவையை உதிரித்து ஒரு தேக்கரண்டி அளவு தூவ வேன்டும். அடுத்து ஆலிவ் காய், கேப்ஸிகம் இரண்டு ஒரு ஒரு தேக்கரண்டி அள்வு தூவி, சீஸையும் தூவி அதன் மேல் டொமேட்டோ கெட் சப்பை தெளித்து ஓவனில் வைத்து 15 நிமிடம் பேக் செய்யவும்.
முடிந்தது ஓவனை ஆப் பண்ணி விட்டு ஐந்து நிமிடம் கழித்து எடுத்து குழந்தைகளுக்கு கொடுக்கவும்.
வாவ் யம்மி யம்மி மினி பிட்சா ரெடி.

குறிப்பு
***********
1. இதை வெரும் மைதாவிலும் செய்யலாம். பில்லிங் சிக்கன் தான் என்றில்லில்லை மதியம் செய்த எந்த காய் கறி கலவை, சிக்கன் கலவை, இறால் கலவை எது வேண்டுமானாலும் வைக்கலாம். டயட் செய்பவர்கள் இதில் பட்டருக்கு பதில் ஆலிவ் ஆயில் சேர்த்து கொள்ளுங்கள். சீஸ் கூட கொஞ்சமா சேர்த்து கொள்ளுங்கள்.

2. வெஜ் டேரியன் கள் சிக்கனுக்கு பதில் பனீர் கியுப்சை பொரித்து சேர்க்கலாம் (அ) மஷ்ரூம் கூட போடலாம் பில்லிங் நம் இழ்டம் தான் அவரவர் விருப்பம்.

3. இது பிரட் பன்னிலும் ஈசியாக தாயாரித்து மைக்ரோவேவிலும் இரண்டு நிமிடம் வைத்தும் எடுக்கலாம்

Thursday, May 7, 2009

டயட் அடை







கொள்ளு = கால் கப்

பார்லி = கால் கப்

பர்கல் = கால் கப்

வெள்ளை சென்னா = கால் கப்

புழுங்கல் அரிசி = கால் கப்

வால் நட் = கால் கப்

ராகி மாவு = ஒரு மேசை கரண்டி



இஞ்சி = ஒரு அங்குல‌ துண்டு

பூண்டு = முன்று ப‌ல்

ப‌ச்ச‌ மிள‌காய் = ஒன்று

கொத்து ம‌ல்லி, புதினா, க‌ருவேப்பிலை சிறிது (பொடியாக‌ கசாப் செய்த‌து)

சின்ன‌ வெங்காய‌ம் ‍ = ஆறு (பொடியாக‌ க‌ட் செய்த‌து



உப்பு = தேவைக்கு

ஆலிவ் ஆயில் (அ) நல்லெண்ணெய் = சுட்டெடுக்க‌





கொள்ளு , வெள்ளை சென்னா , அரிசி யை இரவே ஊற போடவும்.

பர்கல், பார்லி அரைப்பதற்கு ஒரு மணி நேரம் முன் ஊறவைக்கவும்.



வால் ந‌ட்டை ஒரு ம‌ணி நேர‌ம் முன் கொதிக்கும் வெண்ணீரில் ஊற‌வைத்து தோலெடுக‌க்வும்.

அரைக்கும் போது பூண்டு இஞ்சியை சேர்த்து அரைத்து கொள்ள‌வும்.

அரிசியை போட்டு ந‌ன்கு அரைத்து கொண்டு மீதி உள்ள‌ அனைத்து பொருட்க‌ளையும் முக்கால் ப‌த‌த்திற்கு அரைக‌க்வும்.



அரைத்த‌ க‌ல‌வையில் வெங்காய‌ம், கொத்து ம‌ல்லி, புதினா க‌ருவேப்பிலையை பொடியாக அரிந்து சேர்க்க‌வும்.





அரைத்த‌ க‌ல‌வை க‌ட்டியாக இருக்க‌வேண்டும்.

தோசைக‌ளாக‌ கொஞ்ச‌ம் ஆலிவ் ஆயில் தெளித்து சுட்டெடுக்க‌வும்.

இத‌ற்கு தொட்டு கொள்ள‌ மீன் குழ‌ம்பு, கார‌ குழ‌ம்பு, வ‌த்த‌ குழ‌ம்பு, அல்ல‌து புதினா துவைய‌ல்.





 

Sample text

Sample Text

Sample Text