Social Icons

Pages

Monday, June 22, 2009

KFC லாலிபாப்





///இப்போது குழ‌ந்தைக‌ள் அதிக‌மாக‌ விரும்புவ‌து KFC சிக்க‌ன் தான் அந்த‌ அள‌விற்கு சுவை இல்லை என்றாலும் ஓர‌ள்விற்கு ந‌ல்ல‌வே இருக்கும். வெரும் ப‌ருப்பு சாத‌த்திற்கும் ந‌ல்ல‌ இருக்கும்.//


தேவையான‌ பொருட்க‌ள்



ஊறவைக்க


லெக் பீஸ் - எட்டு துண்டு
இஞ்சி - இரண்டு அங்குல துண்டு
பூண்டு - ஐந்து பல்
தக்காளி = அரை
வெங்காயம் - அரை
உப்பு - தேவைக்கு
பேக்கிங் பவுடர் = அரை தேக்கரண்டி

பிரட்டி கொள்ள


மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மைதா - அரை கப்
கார்ன் மாவு - கால் கப்
உப்பு - சிறிது
எண்ணை பொரிக்க தேவையாண அளவு

செய்முறை


1. சிக்கனை நன்கு கழுவி தண்ணீரை வைக்கவும்.
2. வெங்காயம் இஞ்சி பூண்டு தக்காளி அனைத்தையும் அரைத்து அதில் உப்பு பேக்கிங்க் பவுடர் சேர்த்து சிக்கனில் ஊற்றி நன்கு பிசறி , முழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி முன்று மணி நேரம் ஊறவைக்கவும்

3. மைதா, கார்ன் மாவில் மிளகாய்தூள் மற்றும் உப்பை கலந்து ஊறிய சிக்கனை தண்ணீரை வடித்து இதில் பிரட்டி பொரித்தெடுக்கவேண்டும்.


4.பொரிக்கும் போது தீயை மீடியமாக வைத்து மூடி போட்டு நன்கு வெந்ததும் தீயை ஹயில் வைத்து பொரித்தெடுக்கவும்.
5. எண்ணையுடன் சிறிது பட்டர் சேர்த்து பொரித்தால் இன்னும் நல்ல இருக்கும்.

3 comments:

  1. குழந்தைகள் விரும்பும் லொலிபாப் அனைவரையும் அசத்துகிறதே.

    ReplyDelete
  2. வாங்க மாதேவி ரொம்ப சந்தோஷம் உங்கள் பதிவு.

    இது நான் பலவையாக செய்யும் லாலி பாப்பில் இது ஒரு வகை.

    ஆமாம் என் பையன்களுக்கு லாலி பாப் தான் பிடிக்கும்.

    இது லேட்டஸ்டா டிரை பண்ண காரம் இல்லாத லாலி பாப்.

    ஒரளவிற்கு கே எப் சி போலவும் இருக்கும்.

    ReplyDelete
  3. சூப்பரான லாலிபாப்,எனக்கும் ஒரு பார்சல் அனுப்புங்க அக்கா!!

    ReplyDelete

 

Sample text

Sample Text

Sample Text